சென்னை :தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துவரும் சூழலில் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த வாரம் அரசுத்துறை உயர் அலுவலர்கள், சுகாதாரத் துறை வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஜனவரி 6ஆம் முதல் தமிழ்நாட்டில் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி இரவு ஊரடங்கும், ஞாயிறன்று முழு ஊரடங்கும் வணிக நிறுவனம்,உணவகங்களில் 50 விழக்காடு வாடிக்கையாளர்கள் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
எனினும் தமிழ்நாட்டில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. சென்னையில் ஒரு நாள் தொற்று 6 ஆயிரத்தை கடந்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று(ஜன.10) ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.