தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தமிழ்நாட்டில் 1.60 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போட திட்டம்’: முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: தமிழ்நாட்டில் இந்தாண்டிற்குள் ஒரு கோடியே 60 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி
cm meeting

By

Published : Jan 29, 2021, 2:34 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிப்வரி மாதத்திற்கான ஊரடங்கு தளர்வு, பள்ளி, கல்லூரிகள் திறப்பு மற்றும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.

சமீப காலமாக இங்கிலாந்திலிருந்து பரவும் புதிய கரோனா தொற்றை தடுப்பது குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் திறப்பு, நீச்சல் குளம் திறப்பு, திரையரங்கில் 100 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதி குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும் நிலையில், அது குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், ’இதுவரை பதின்மூன்று முறை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். கரோனா தடுப்பு பணிகளுக்காக 15 ஆயிரம் புதிய மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அளவு மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இதுவரை கரோனா தொற்று மீட்பு நடவடிக்கைக்கு 7 ஆயிரத்து 65 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாயிரம் அம்மா மினி கிளினிக்குகள் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ள நிலையில் தற்போதுவரை 882 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் இந்த ஆண்டிற்குள் ஒரு கோடியே 60 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படும். கிட்டத்தட்ட 88 ஆயிரத்து 467 நபர்களுக்கு கரோனா தடுப்பு ஊசி இதுவரை போடப்பட்டுள்ளது’ என்றார்.

இதையும் படிங்க:நீங்க வேணும்னா ஊசி போடாதீங்க: கரோனா தடுப்பூசிகளுக்குத் தடைவிதிக்க முடியாது...!

ABOUT THE AUTHOR

...view details