தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பினார்.
விஜயகாந்த் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து! - தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், "பிறந்தநாள் (ஆகஸ்ட் 25) கொண்டாடும் தங்களுக்கு, என் உளம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். திரைப்படத் துறை, அரசியல் மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக பணியாற்றி, நன்முத்திரை பதித்து வரும் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், நீடுழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தங்களுக்கு எனது இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.