சென்னை கோட்டூர்புரத்தில் அம்மா மினி கிளினிக் திறந்துவைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ”தமிழ்நாடு அம்மா மினி கிளினிக் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் சென்னையில் பல்வேறு இடங்களில் மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்கள் இந்த மினி கிளினிக் மூலம் பயனடைந்து வருகின்றனர். தேமுதிக, பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளன.
’பழனிசாமி- சசிகலா சந்திப்பு ஜென்மத்திற்கும் நடக்காது’: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம் - பழனிசாமி சசிகலா சந்திப்பு
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா சந்திப்பு ஜென்மத்திற்கும் நடைபெறாது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடரும். நட்பு ரீதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சசிகலாவை சந்திப்பதில் தவறில்லை. கொள்கை வேறு; கூட்டணி வேறு. பணத்தை காட்டி கூட்டம் கூட்டுவதில் அவர்கள் சிறந்த கட்டமைப்பை கொண்டுள்ளனர். அது காலத்திற்கும் நிற்காது. உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி அதிமுகவினரிடையே உரையாற்றியது தவறாக திரிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி, சசிகலா சந்திப்பு ஜென்மத்திற்கும் நடைபெறாது. சசிகலா ஒன்றிணைவோம் வா என அழைத்தது திமுகவைதான். சசிகலா மற்றும் திமுகவிற்கு பொது எதிரி அதிமுகதான்” என்றார்.
இதையும் படிங்க:பாஜகவில் இணையும் சிவாஜி மகன்!