தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

75ஆவது சுதந்திர தின விழா: விருதுகளை வழங்கிய முதலமைச்சர் - chennai district news

டாக்டர் அப்துல் கலாம் விருதை பாரதிதாசன் பல்கலைக்கழக இயற்பியல் சிறப்பு பேராசிரியர் முனைவர் லட்சுமணனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

By

Published : Aug 15, 2021, 5:09 PM IST

சென்னை: நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து கீழ்க்காணும் விருதுகளை வழங்கினார்.

தகைசால் தமிழர் விருது: சுதந்திரப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என். சங்கரய்யா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தகைசால் தமிழர் விருது பெற்ற என்.சங்கரய்யா

டாக்டர் அப்துல் கலாம் விருது: பாரதிதாசன் பல்கலைக்கழக இயற்பியல் சிறப்பு பேராசிரியர் முனைவர் லட்சுமணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

டாக்டர் அப்துல் கலாம் விருது

துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு வழங்கப்பட்டது.

முதலமைச்சரின் நல் ஆளுமை விருது: கிண்டி கரோனா தொற்று மருத்துவமனை இயக்குநர் நாராயணசாமி, சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் நில நிர்வாக இணை ஆணையர் பார்த்திபன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு விருது(மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை): ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி திருச்சி, சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் பத்மபிரியா, திருநெல்வேலியைச் சேர்ந்த மரிய அலாசியஸ் நவமணி, வி ஆர் யுவர் வாய்ஸ் சென்னை, ஈரோடு மத்திய மாவட்ட கூட்டுறவு அமைப்பு ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

ஒளவையார் விருது (சமூக நலத்திற்காக மற்றும் சிறந்த சேவை): ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முனைவர் சாந்தி துரைசாமி,

சிறந்த மூன்றாம் பாலினத்தவர்: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை கிரேஸ் பானுவுக்கு வழங்கப்பட்டது.

விருது பெற்ற திருநங்கை கிரேஸ் பானு
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருது:தஞ்சாவூர் மாநகராட்சி

சிறந்த நகராட்சி: முதல் பரிசு - உதகமண்டலம், இரண்டாம் பரிசு - திருச்செங்கோடு, மூன்றாம் பரிசு - சின்னமனூர்

சிறந்த பேரூராட்சி: முதல் பரிசு - திருச்சி மாவட்டம் கள்ளக்குடி, இரண்டாம் பரிசு - கடலூர் மாவட்டம், மேல்பட்டம்பாக்கம், மூன்றாம் பரிசு - சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டது

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள்

ஆண்கள் பிரிவு: சென்னை - அரவிந்த் ஜெயபால், திருவாரூர் - பசுருதின், நீலகிரி - ரஞ்சித் குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

பெண்கள் பிரிவு: திண்டுக்கல் - மகேஸ்வரி, கடலூர் - அமல ஜெனிபர் ஜெயராணி, சென்னை - மீனா ஆகியோருக்குத் தரப்பட்டது.

சிறப்பாக செயல்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கான விருது(முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு உட்பட்டு) : சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, ராமநாதபுரம் சாயல்குடி அரசு சமூக சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது.

கரோனா தொற்று தடுப்புப் பணிக்கான சிறப்பு பதக்கம் (மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்): சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் ரவி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை செவிலியர் காளீஸ்வரி, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் சுகந்தி உள்ளிட்ட ஒன்பது பேருக்கு வழங்கப்பட்டது.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை காவல் துறை விருதுகள்: தர்மபுரி ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் பிரபு, மதுரை பேரையூர் பெண் காவல் ஆய்வாளர் ராஜசுலோச்சனா, திருப்பூர் வடக்கு காவல் நிலைய தலைமைக் காவலர் கல்யாண பாண்டி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை விருது: வட சென்னை தண்டையார்பேட்டை தீயணைப்போர் - இதயகண்ணன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தீயணைப்பு நிலையம் - சண்முகசுந்தரம், திருச்சி தீயணைப்பு மீட்பு நிலையம் - முகமது கான் ஆகியோருக்குத் தரப்பட்டது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை விருது: வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தூய்மைப் பணியாளர் - சுவர்ணலதா, ராணிப்பேட்டை நகராட்சி தட்டச்சர் - ஜோதிலட்சுமி, சென்னை பெருநகராட்சி ஆறாவது மண்டல மலேரியா தடுப்புப் பணியாளர் - மூர்த்தி உள்ளிட்ட ஆறு பேருக்கு வழங்கப்பட்டது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை விருது: திண்டுக்கல் மாவட்ட பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சந்தனமேரி கீதா, ஈரோடு மாவட்டம் பவானி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் கண்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை: சென்னை செங்குன்றம், சைதாப்பேட்டை தாலுகா வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க விற்பனையாளர் இளவரசு, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா வத்தலக்குண்டு பிரதம கூட்டுறவு பண்டகசாலை விற்பனையாளர் ராஜையா, திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் குரிசிலாப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர் சங்கரன் ஆகியோருக்குத் தரப்பட்டது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை: திருச்சி மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரி, செங்கல்பட்டு பெரும்பாக்கம் கிராம ஊராட்சி செயலாளர் முருகன் உள்ளிட்ட ஆறு பேருக்கு வழங்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் விருதுபெற்றவர்கள்

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது’ - மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details