சென்னை : தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டகலை மூலம் உற்பத்தி செய்யப்படும் 20 நடமாடும் தேநீர் கடைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை மூலம் தேநீர் கடைகள் செயல்படும்.
15 லட்சம் மதிப்பிலான வண்டிகளை 2 லட்சம் டெபாசிட் செலுத்தி மழைவாழ் மக்கள் கடைகளை நடத்தலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முதல் கட்டமாக சென்னையில் 10 கடைகள், திருப்பூர், ஈரோட்டில் தலா மூன்று கடைகள், கோயம்புத்தூரில் நான்கு கடைகள் செயல்படும்.