தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநங்கை செவிலியருக்கான பணி ஆணையை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி - திருநங்கை செவிலியருக்கான பணியானையை முதலமைச்சர் வழங்கினார்

சென்னை: இந்தியாவில் முதல் முறையாக திருநங்கை செவிலியருக்கான பணி ஆணையுடன் 5224பேருக்கு சுகாதாரத் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுவதற்கான பணி ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Chief Minister gave nurse Work Order
கண் பரிசோதனை மையங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர்

By

Published : Dec 2, 2019, 4:36 PM IST

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் சுகாதாரத் துறை சார்பில் 5224 பேருக்கு பணி நியமன ஆணைகளையும், 32 காணொலி கண் பரிசோதனை மையங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இது குறித்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீரசெல்வம்,

நேர்மையான முறையில் முறைகேடு இல்லாமல் தகுதி, திறைமைக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வு வாரியத்தின் மூலம் இதுவரை 27,436 பேர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செவிலியர்கள் கடமைக்கு பணியாற்றாமல் கடமையாக பணியாற்ற வேண்டும். தமிழ்நாடு மக்கள் தனியார் மருத்துவமனையை விட, அரசு மருத்துவமனையை நம்பி, விரும்பி சிகிச்சைப் பெற வர வேண்டும். அதுபோல செவிலியர்கள், மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

பின்னர், இது குறித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி,

அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிக்கான அனுமதிக்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒன்பதாயிரம் பேர் மருத்துவக் கல்வி படிக்கக்கூடிய வாய்ப்பு அமைந்திருகிறது.

கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 1350 பேர் மருத்துவ இடங்கள் கூடுதலாக பெற்று, படிக்கக்கூடிய வாய்ப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத் துறையில் தமிழ்நாடு தொடர்ந்து பல்வேறு சாதனைகளை பெற்று வருகிறது.

கண் பரிசோதனை மையங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர்

குறிப்பாக, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் தமிழ்நாடு தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சிறந்த மாநில விருது பெற்றுள்ளது. புதிதாக பணி ஆனை பெற்றவர்கள் சிறப்பாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, 5224 பேருக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதில் மூன்று திருநங்கைகளுக்கு செவிலியர் பணிக்காக பணி ஆணையை வழங்கினார். பின்னர், 32 மாவட்டங்களில் காணொலி கண் பரிசோதனை மையங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மேலும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கைகள் மாற்று அறுவை சிகிச்சை முதல் முறையாக வெற்றிகரமாக செய்ததற்காக, மத்திய அரசின் விருதைப் பெற்றுள்ள மருத்துவர்களை முதலமைச்சர் பாராட்டினார். மேலும், பல்வேறு பிரிவுகளின் கீழ் மத்திய அரசின் விருதினை பெற்றவர்களையும் முதலமைச்சர் பழனிசாமி பாராட்டினார்.

இதையும் படிங்க: ‘சமூகநீதிக்கு ஆபத்து என்றால் அதற்கு எதிர்குரல் கொடுப்பது அதிமுக மட்டுமே’ - முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்

ABOUT THE AUTHOR

...view details