இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் பிப்ரவரி 2ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி. பாலசுப்பிமணியம், மருத்துவர் சாந்தா ஆகியோர் மறைவுக்கு நேற்றைய தினம் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய பேரவை கூட்டம்
இன்றைய தினம் காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, அதன் மீது விவாதம் தொடங்க உள்ளது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்று பேச உள்ளனர். நாளையும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறும். விவாதம் முடிந்ததும் அதற்கான பதிலுரை நிகழ்த்தப்படும். அன்றே சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.