இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பெண்களின் சிறப்பு, மாண்பைப் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு உணர்த்திடும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நன்னாளில் அனைத்து மகளிருக்கும் எனது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், பெண்களின் வாழ்வு மேன்மையுறவும், நல்வாழ்விற்காகவும் தமிழ்நாடு அரசு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, கிராமப்புற பெண்களின் பொருளாதாரம் மேம்பட விலையில்லா ஆடு மாடுகள், திருமண நிதியுதவியுடன் தாலிக்குத் தங்கம், பெண்களுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின், பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் நீக்கிட 13 அம்சத் திட்டங்கள், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒன்பது மாத காலம் மகப்பேறு விடுப்பு, உழைக்கும் மகளிர் பயன்பெறும் வகையில் 'அம்மா இருசக்கர வாகனம்', வேலைக்குச் செல்லும் மகளிர் பாதுகாப்பான வசிப்பிடத்தில் தங்கிடவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.