இந்தியா முழுவதும் இன்று (ஆகஸ்ட்.15) நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து விட்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டிலிருந்து 4 லட்சத்து 18 ஆயிரத்து 903 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பத்திரமாக, அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 64,661 வெளிநாடு வாழ் தமிழர்கள் " வந்தே பாரத் மற்றும் சேது இயக்க "திட்டம் மூலம் பத்திரமாகத் தாயகம் திரும்பியுள்ளனர்.
தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் அதிகரிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! - சுதந்திர தினம்
சென்னை: தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 17,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பால் குணமடைந்து வீடு திரும்புவார்களின் எண்ணிக்கை அதிகமாகவும், நோயினால் இறந்தவர்களின் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களது இன்னுயிரை நீத்த தியாக செம்மல்களைச் சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 16,000 ரூபாயிலிருந்து 17,000 ரூபாய் உயர்த்தப்படுகிறது.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசு தாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு ஊதியம் 8,000 ரூபாயிலிருந்து 8,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாடு அரசு நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்வது குறைந்துவிட்டதை ஆராய்ந்து, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் மருத்துவர் ஆகும் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், இந்தாண்டு முதல் மருத்துவப்படிப்பில் உள் ஒதுக்கீட்டில், 7.5 விழுக்காடு வழங்க முடிவு செய்து, அதை சிறப்பு சட்டமாகப் பிறப்பிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, மெரீனாவில் நினைவிடம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நினைவிடம் விரைவில் திறக்கப்படும். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், கல்வி தொலைக்காட்சி வாயிலாக தமிழ்நாடு அரசு சார்பில் தொடர்ந்து பாடத்திட்டங்கள் ஒளிப்பரப்பப்படுவதாகவும், புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்து தொழில் வளர்ச்சியை மேம்படுத்தி, பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.