இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் புதுடெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (31.8.2020) காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பிரணாப் முகர்ஜி இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்து சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். இவர் நிதித்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், மக்களவை உறுப்பினராக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திறம்பட செயலாற்றியவர். ஜெயலலிதா ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா, தமிழ்நாடு சட்டப்பேரவை வைரவிழா, இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா உள்ளிட்ட பல விழாக்களில் ஜெயலலிதாவுடன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தவர்.