தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TN CM Awards for Police: காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிப்பு - CM Stalin

2023ஆம் ஆண்டின் சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

Chief minister award for police officers TN government announces
சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விராேத கடத்தல் தடுப்பு தினம் - காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிப்பு

By

Published : Jun 25, 2023, 2:07 PM IST

சென்னை:2023ஆம் ஆண்டின் சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 9.5.2022 அன்று சட்டப்பேரவையில் உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையின் போது, சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள், காவலர்களை ஊக்குவிப்பதற்கென முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துரைக்கேற்ப அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

வெ.பத்ரிநாராயணன், காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்டம்

டோங்கரே பிரவின் உமேஷ், காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்டம்

மா.குணசேகரன், காவல் துணை கண்காணிப்பாளர், இருப்பு பாதை, சேலம் உட்கோட்டம்.

சு.முருகன், காவல் சார்பு ஆய்வாளர், நாமக்கல் மாவட்டம்

ரா.குமார், முதல் நிலை காவலர்- 1380, நாமக்கல் மாவட்டம்

போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை ஒழிப்பதில் அஸ்ரா கார்க், காவல்துறைத் தலைவர், தென் மண்டலம், மதுரை, அவர்களின் சீரிய பணியை அங்கீகரித்து அவருக்கு ரொக்கப் பரிசு இல்லாமல், இந்த "சிறப்பு பதக்கம்" தனித் தேர்வாக வழங்கப்படுகிறது.

அஸ்ரா கார்க்கின் தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு மிகுந்த கண்காணிப்பின் மூலம் போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டம், (NDPS Act) சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. மூத்த அதிகாரிகளுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார் மற்றும் 2022-2023ஆம் ஆண்டில், 1843 நபர்கள் இதுதொடர்பாக, கைது செய்யப்பட்டு உள்ளனர். இது சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெ.பத்ரிநாராயணன், காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்டம், போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளினால், போதைப் பொருட்கள் இல்லாத கோவை மாவட்டத்தை உருவாக்க சீரிய முயற்சிகள் எடுத்துள்ளார்.

இம்மாவட்டத்தில் இவருடைய தீவிர முயற்சிகளின் காரணமாக, 128 கல்லூரிகளில் போதைப் பொருட்களுக்கு எதிரான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள், புதிய தலைமுறை செயற்கை போதை பொருட்கள், கஞ்சா சாக்லேட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

2022-ம் ஆண்டு மட்டும், போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் கஞ்சா வியாபாரிகள் பலபேர் கைது செய்யப்பட்டு, அவர்களின் மீது, நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பபட்டுள்ளது. போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தில், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்களை ஈடுபடுத்தியதின் விளைவாக, கோவை மாவட்டத்திலுள்ள 108 கிராம பஞ்சாயத்துகள் கஞ்சா இல்லாத கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன.

டோங்கரே பிரவின் உமேஷ், காவல் கண்காணிப்பாளர் திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய போது, கரூரில் சிறப்பு சோதனை மூலம் நன்கு வளர்ந்த சுமார் 2790 கிலோ எடையுள்ள 3584 கஞ்சா செடிகள் இவரால் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய போது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் 10 வணிக வழக்குகளும் அடங்கும். 540 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அதில் 69 குற்றவாளிகள் "போதைப் பொருள் குற்றவாளிகள்" என்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 2,266.9 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 98 பாட்டில்கள் MEPHENTERMINE SULPHATE INJECTION IP கைப்பற்றப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இதுவரை போதைப்பொருள் கடத்தல்காரர்களின் 345 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

மா.குணசேகரன் காவல் துணை கண்காணிப்பாளர் சேலம் தலைமையில் தனிப்படை அமைத்து இரயில் வண்டிகளில் தீவிர சோதனை மேற்கொண்டதில் ”கஞ்சா வேட்டை2.0” மற்றும் ”கஞ்சா வேட்டை3.0”-யின்போது கஞ்சா கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்ட பல குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு 1119 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு 77 குற்றவாளிகளை கைதுசெய்து 131 வழக்குகள் பதிவு செய்து உள்ளார்.

சு.முருகன், காவல் சார்பு ஆய்வாளர், நாமக்கல் மாவட்டம் மற்றும் ரா.குமார், முதல் நிலை காவலர்- 1380, புதுச்சத்திரம் காவல் நிலையம், நாமக்கல் மாவட்டம் ஆகியே இருவரும் காவல் கண்காணிப்பாளர், நாமக்கல் மாவட்டம் அவர்களால் காவல் துணை கண்காணிப்பாளர், நாமக்கல் உட்கோட்டம் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காண அதிக முயற்சி எடுத்து தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் ஆதாரங்களை சேகரித்து ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மாநிலங்களுக்குப் பயணம் செய்தும் ஆதாரங்களை திரட்டி அவர்களிடமிருந்து குட்கா பறிமுதல் செய்ய உதவியாக இருந்துள்ளனர். இந்த விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சரால், சுதந்திரதின விழாவில் வழங்கப்படும்'' என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: கோவையைச் சேர்ந்த மாணவர் லண்டனில் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details