தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீர தீர செயல்புரிந்த 5 காவலர்களுக்கு முதலமைச்சர் விருது

சென்னை: வீர தீர செயல்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் விருது 5 காவல் அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது.

chennai police
chennai police

By

Published : Jun 19, 2020, 10:34 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் வில்சன் (57). இவர், கடந்த ஜனவரி 8ஆம் தேதி அங்குள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் அரிவாளால், வெட்டியும், கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில், வில்சன் கொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கி, பங்கரவாதிகளை கைது செய்த டி.ஐ.ஜி. கண்ணன், கியூ பிரிவு எஸ்.பி மகேஷ், உளவுத்துறை சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தாமோதரன், கோயம்புத்தூர் டி.எஸ்.பி பண்டாரி நாதன், ஆகிய ஐந்து பேரின் வீர தீர செயல்களுக்கான முதலமைச்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்கள் 5 பேருக்கும் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:கரோனா பாதிப்பு: தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 19) ஒரே நாளில் 2115 பேருக்கு தொற்று

ABOUT THE AUTHOR

...view details