தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு! - My Tribute to Army Soldiers

வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டைச்சேர்ந்த ராணுவ வீரருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரருக்கு நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு..!
வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரருக்கு நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு..!

By

Published : Aug 11, 2022, 8:34 PM IST

சென்னை:வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச்சேர்ந்த ராணுவ வீரர் குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’காஷ்மீரில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழ்நாட்டைச்சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உட்பட மூன்று இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக்கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.

தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணம் எய்திய ராணுவ வீரர்களுக்கு எனது அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கின்றேன்.

வீரமரணம் எய்திய தமிழ்நாட்டைச்சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களுக்கு ரூபாய் இருபது லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்’ எனக்குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:விலைவாசி உயர்வைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் பேரணி!

ABOUT THE AUTHOR

...view details