சென்னை: தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களைச்சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு ஊதிய நிலுவை தொடர்பாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 53 கோடியே 20 லட்சம் ரூபாயை உடனடியாக ஒதுக்கி பணபலன்களை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார். கௌரவ விரிவுரையாளர்கள் சுமார் 4000 பேர் விரைவில் பணிநியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதற்காக தேர்வு நடத்தப்பட்டு, இவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள உயர் கல்வித்துறை இயக்கங்கள் மூலம் நியமனம் செய்யப்படுவார்கள். இவர்கள் அனைவரும் நெட், ஸ்லெட், பிஹெச்டி இவற்றுள் ஏதாவது ஒன்றை நிறைவு செய்து இருக்க வேண்டும்.
இந்தி எதிர்ப்புப்போராட்டம் பெரியார் அண்ணா காலத்திலிருந்தே திராவிட இயக்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தி திணிப்பை தான் நாங்கள் எதிர்கிறோம், நாளை திமுக, மாணவரணி இளைஞரணி போராட்டம் நடைபெற உள்ளது.