தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வஉசி பிறந்தநாள் - அமைச்சர்கள் மரியாதை - சசிகலா

சென்னை: வ.உ. சிதம்பரனாரின் 149ஆவது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

WUC Birthday Celebration - Ministers Honor!
WUC Birthday Celebration - Ministers Honor!

By

Published : Sep 5, 2020, 3:27 PM IST

Updated : Sep 5, 2020, 4:59 PM IST

‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் 149ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையிலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

பின்னர் அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது எம்.ஜி.ஆரை போல் நடிகர் விஜய்யை சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘கப்பலோட்டியவர்கள் எல்லாம் வ.உ.சி ஆகி விட முடியாது, மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது. அது போன்று தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், கூட்டணி குறித்து அதிமுக கட்சி தலமை தான் முடிவு செய்ய வேண்டும். எங்களைப் பேசக்கூடாது என்று கட்டளையிட பாஜகவிற்கு அதிகாரம் கிடையாது. நாங்கள் எப்போதும் கூட்டணி தர்மத்தைக் கடைபிடித்து வருகிறோம். கூட்டணிக்குள் கருத்துக்களைச் சொல்லாம், ஆனால் விமர்சனங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பின்னர் சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சசிகலா வெளியே வந்தாலும், வராவிட்டாலும் எங்களுக்கு அது ஒரு பொருட்டே கிடையாது என்றார்.

இதையும் படிங்க:பெண்ணின் வீடு எரிப்பு உள்பட 22 வழக்குகள்: பிரபல ரவுடி கைது!

Last Updated : Sep 5, 2020, 4:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details