தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்ணை தாக்கிய வழக்கில் தீட்சிதருக்கு முன்ஜாமீன் மறுப்பு! - chidambaram temple

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய வழக்கில் முன்ஜாமீன் கோரி தீட்சிதர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

high court

By

Published : Nov 25, 2019, 9:18 PM IST

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி இரவு முக்குருணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்யச் சென்ற பெண்ணை தீட்சிதர் தாக்கிய சம்பவம் இணையதளங்களில் வைரலாக பரவியது.

இது தொடர்பாக தீட்சிதர் மீது சிதம்பரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னை காவல்துறையினர் கைது செய்யக் கூடும் எனக்கூறி, முன்ஜாமீன் கோரி தீட்சிதர் தர்ஷன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கோயில் நடை அடைக்கும் நேரத்தில் வந்து பூஜை செய்ய வேண்டும் என அந்த பெண் தகராறு செய்ததாகவும், ஒரு கட்டத்தில் தன்னை நோக்கி கையை தூக்கியதால், தற்காப்புக்காக தள்ளி விட்டதாகவும், தனக்கெதிராக போலீசார் பொய் வழக்கு போட்டிருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன், மனுதாரர் தரப்பில் மனு வாபஸ் பெறப்பட்டத்தையடுத்து தீட்சிதர் தர்ஷன் முன்ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details