தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் வருகை - 44th Chess Olympiad

மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக, வெளிநாட்டு விளையாட்டு வீரா்கள் சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனா்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி: வெளிநாட்டு வீரர்கள் சென்னை வருகை!
செஸ் ஒலிம்பியாட் போட்டி: வெளிநாட்டு வீரர்கள் சென்னை வருகை!

By

Published : Jul 23, 2022, 4:54 PM IST

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 2022, தமிழ்நாட்டின் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக, வெளிநாட்டு வீரர்கள் விமானங்கள் மூலம் சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில், இன்று ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனை இருவரும் காலை 8.30 மணிக்கு துபாயில் இருந்து சென்னை வந்தனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் செஸ் ஒலிம்பியாட் குழு வரவேற்று, தனி காரில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக இதே விமானத்தில் மேலும் 20 வீரா்கள் வருவதாக இருந்த நிலையில், அந்த பயணம் மாற்றப்பட்டு, அவர்கள் இன்று இரவு 10.40 க்கு மலேசியா வழியாக சென்னை வருகின்றனா்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி: வெளிநாட்டு வீரர்கள் சென்னை வருகை!

அதேபோல் இன்று இரவு மலேசியாவில் இருந்தும், ஏர் பிரான்சிலிருந்து வரும் விமானங்களிலும் வீரர்கள் சென்னை வர இருக்கின்றனா். இவர்களை வரவேற்று அழைத்துச் செல்வதற்கு சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு அரசு நியமித்துள்ள சிறப்புக் குழுவினரும், செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருவண்ணாமலையில் நீச்சல் குளத்தில் சதுரங்கம் விளையாடி விழிப்புணர்வு

ABOUT THE AUTHOR

...view details