தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது தமிழர்களுக்கு பெருமை - எல். முருகன் - எல் முருகன்

தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது தமிழர்களுக்கு பெருமை என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் செஸ் போட்டி நடைபெறுவது தமிழர்களுக்கு பெருமை - எல்.முருகன்
தமிழ்நாட்டில் செஸ் போட்டி நடைபெறுவது தமிழர்களுக்கு பெருமை - எல்.முருகன்

By

Published : Jul 30, 2022, 7:58 PM IST

சென்னை: சாஸ்திரி பவனில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தமிழ்நாட்டில் பிரதமர் மோடியால் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒலிம்பியாட் போட்டி போட்டி நடைபெறுவது தமிழர்களுக்கு பெருமை.

தமிழ்நாட்டில் செஸ் போட்டி நடைபெறுவது தமிழர்களுக்கு பெருமை - எல்.முருகன்

குடியரசு தலைவராக பழங்குடியனப் பெண்ணை அமர்த்தி பிரதமர் சாதனை படைத்துள்ளார். 75ஆவது சுதந்திர விழாவிற்காக வீடு தோரும் மூவர்ண கொடி ஏற்றிவைக்க திட்டமிட்டுளோம். தமிழ்நாட்டில் 534 கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்க இருக்கிறோம். இதற்காக 26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சுயநிதி திட்டத்தில் தெரு ஓரம் இருக்கும் வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் வீதம் 70,000 பேருக்கு வழங்கப்பட்டுவருகிறது.

தேசிய விருதுகள் பெற்ற தமிழ் கலைஞர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம். முன்னெச்சரிக்கை தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும். மெரினா கடற்கரையில் தூய்மைபடுத்தும் பணி பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக செப்டம்பர் 17ஆம் தேதி மிகப் பெரிய விழாவை கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம்.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறது. மத்திய அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலம் வெளிப்படை தன்மையோடு தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் இளைஞர்கள் அதிக அளவில் மத்திய அரசு பணிகளுக்கு பதிவு செய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது - சித்தராமையா

ABOUT THE AUTHOR

...view details