குமரிக்கடல் பகுதியில் வளி மண்டல சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாகத் தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்குச் சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்; நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.