சென்னை வேளச்சேரி புவனேஷ்வரி நகரை சேர்ந்தவர் நடராஜன் (38). இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் திட்ட மேலாளராக பணிபுரிந்துவருகின்றார். இவர் சொந்தமாக டியோ இருசக்கர வாகனத்தை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர் கடந்த 14ஆம் தேதி இரவு தனது வீட்டில் உள்ள பார்க்கிங்கில் இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் மறுநாள் காலை (15ஆம் தேதி) வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளதை கண்டு நடராஜன் அதிர்ச்சியடைந்தார்.
இரவில் வீட்டில் புகுந்து பைக்கை திருடி செல்லும் இளைஞர் - சிசிடிவியில் பதிவான காட்சி! பின்னர் அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அவர் அய்வு செய்தபோது இளைஞர் ஒருவர் கேட் வழியாக வந்து இருசக்கர வாகனத்தை திருடி சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.
இதைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை காண்பித்து நடராஜன் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து திருடிய நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னையில் போலி தந்தங்கள் பறிமுதல்: காவல்துறை விசாரணை!