தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலிகிராமத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி!

சென்னை: சாலிகிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துப் பணத்தை கொள்ளையடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

atm
atm

By

Published : Sep 4, 2020, 2:54 PM IST

சென்னை சாலிகிராமம், அழகப்பா சாலையில் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று ஏடிஎம் மையத்தியத்தில் புகுந்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து உடைத்துள்ளனர்.

ஏடிஎம் இயந்திரம்
பின்னர் அங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தினால் உடனடியாக அங்கிருந்து அந்த கும்பல் தப்பியோடியுள்ளனர்.
சாலிகிராமத்தில் ஏடிஎம்-இல் திருட்டு முயற்சி!

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஏடிஎம் இயந்திரத்தைப் பார்வையிட்டனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தி இருந்ததைக் கண்டனர்.

மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து அந்த நபர்களை கண்டுப் பிடிக்க காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:பெண்ணை தவறான உறவுக்கு அழைத்த போலி ரிப்போர்ட்டர் உள்பட இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details