சென்னை: சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக மூன்று சிறார்கள் சுற்றி திரிந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் மூவரையும் கொடுங்கையூர் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் எனத் தெரிய வந்தது. மேலும் இவர்கள் செம்பியம், நுங்கம்பாக்கம், அயனாவரம் பகுதிகளில் கடைகளை உடைத்து திருடியதாகவும், கிண்டியில் ஒரு இருசக்கர வாகனத்தை திருடியதாகம் ஒப்புக் கொண்டனர்.