தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளைஞருக்கு இன்ஸ்டாகிராம் அளித்த பரிசு! - IT

சென்னை: இன்ஸ்டாகிராம் வலைதளத்திலுள்ள குறைபாட்டை கண்டறிந்த இளைஞர் லக்ஷ்மண் முத்தையா என்பவருக்கு அந்நிறுவனம் 20 லட்ச ரூபாயினை பரிசாக அளித்துள்ளது.

லக்ஷ்மண் முத்தையா

By

Published : Jul 19, 2019, 2:11 PM IST

தொழில்நுட்பங்களில் உள்ள குறைபாடுகள் குறித்த ஆய்வினை செய்துவருபவர் சென்னையைச் சேர்ந்த லக்ஷ்மண் முத்தையா. அவர் இன்ஸ்டாகிராம் வலைதளத்திலுள்ள பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பயனாளர் தனது கடவுச்சொல்லை மாற்றுவதற்கு பயன்படுத்தும் ரிக்கவரி குறியீடு (Recovery code) மூலம் அவரது கணக்கை எளிதில் ஹேக் செய்ய இயலும் என்பதை கண்டறிந்துள்ளார்.

அவர் இத்தகவலை முகநூல் நிறுவனத்திற்கும் அனுப்பியுள்ளார். இதனை ஆராய்ந்த முகநூல், இன்ஸ்டாகிராம் நிறுவன பாதுகாப்பு அலுவலர்கள் இக்குறைபாட்டை நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இத்தகவலை கண்டறிந்த லக்ஷ்மண் முத்தையாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 30 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பின்படி, ரூபாய் 20 லட்சத்து 56 ஆயிரம் பரிசாக வழங்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details