தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மின்சார ரயில் வழக்கம் போல் இயங்கும்! - chennai latest news

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல் இன்று (நவ.8) இயங்கும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

chennai-suburban-train-will-run-as-usual
chennai-suburban-train-will-run-as-usual

By

Published : Nov 8, 2021, 11:09 AM IST

சென்னை :தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகச் சென்னையில் நேற்று முன்தினம் (நவ.6) இரவு முதல் நேற்று (நவ.7) அதிகாலை இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாகச் சென்னை முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. இதனால் ரயில் சேவையும் நேற்று பாதிக்கப்பட்டது. தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியதால், ரயில் சேவை சில மணி நேரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட ரயில்கள் தவிர்த்து மற்ற அனைத்து ரயில்களும் வழக்கமான அட்டவணையின் படி இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படாது

இதுகுறித்து, தென்னக ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் தெரிவிக்கையில், ”நேற்றைய தினம் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்று ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இன்று சென்னை கொருக்குப்பேட்டை தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளிலுமே தண்ணீரானது வடிந்து விட்டது. இதன் காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படாது.

கொருக்குப்பேட்டை பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கும் காரணமாக டெல்லி, ஹவுரா,ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள் அங்கிருந்து வரும் ரயில்கள் சற்று தாமதமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...

ABOUT THE AUTHOR

...view details