நிவர் புயல் காரணமாக நேற்று காலை 10 மணிமுதல் ரத்துசெய்யப்பட்டிருந்த புறநகர் சிறப்பு ரயில் சேவைகள் இன்று மதியம் 03:00 மணிமுதல் மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் இரவு 8:00 மணிவரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு புறநகர் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் இன்று (நவ. 26) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், குறைந்த அளவிலேயே பொதுமக்கள் ரயிலில் செல்வதாக கூறப்படுகிறது.
சென்னை புறநகர் ரயில் சேவை தொடக்கம் - சென்னை புறநகர் ரயில்
சென்னை: நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புறநகர் சிறப்பு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்
அதன்படி, புறநகர் ரயில் செல்லும் வழிகள் கீழ்வருமாறு,
- எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் - அரக்கோணம்
- அரக்கோணம் - எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம்
- எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் - கும்மிடிப்பூண்டி
- கும்மிடிப்பூண்டி - எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம்
- சென்னை கடற்கரை - செங்கல்பட்டு
- செங்கல்பட்டு - எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் ஆகிய பகுதிகளுக்குப் புறநகர் ரயில் சேவை தொடங்கியுள்ளது.