சென்னை: வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 18 வயதுமிக்க மாணவன், மாதவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவன் விடுமுறை நாட்களில் பகுதி நேரமாக கேட்டரிங் சர்வீஸ் வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேட்டரிங் பணியின் போது சத்திய குமார் (வயது 40) என்பவரது அறிமுகம் கிடைத்து உள்ளது.
அப்போது சத்திய குமார் மாணவனைத் தன்னிடம் வேலைக்கு வருமாறு அழைத்ததுடன் அவரது செல்போன் எண்ணை வாங்கி சென்று உள்ளார். பின்னர் மாணவனை தினமும் கேட்டரிங் வேலைக்கு சத்திய குமார் அழைத்து செல்போனில் பாலியல் ரீதியாக பேசி வந்து உள்ளார். இதே போல் நேற்று முன்தினம் இரவு சத்திய குமார், மாணவனை தொடர்பு கொண்டு கேட்டரிங் வேலை ஒன்று வந்து உள்ளதாகவும், ஆகையால் பெரியமேடு பகுதிக்கு வருமாறு அழைத்து உள்ளார்.
பின், சத்திய குமார் அழைத்ததன் பேரில் அங்கு சென்று உள்ளார். பின்னர் சத்திய குமார் காலையில் வேலைக்கு செல்ல வேண்டும். ஆகையால் இன்று இரவு தன்னுடன் வந்து தங்கி கொள்ளுமாறு கூறி உள்ளார். பின், பெரியமேடு பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்று தன்னுடன் தங்க வைத்து உள்ளார். நள்ளிரவு மாணவன் தூங்கி கொண்டிருந்த போது சத்திய குமார் திடீரென அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.