ஸ்டாலின், திமுக:
டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் எனும் துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர், மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இணை அமைச்சராக பணியாற்றியவர். மூன்று முறை டெல்லி முதலமைச்சராக தொடர்ந்து பதவி வகித்த இவர் நிர்வாகத் திறமை மிகுந்தவர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர். காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.