சென்னை: இந்திய தொழிற்சாலை கூட்டமைப்பின், இந்திய பசுமை கட்டிட சபை சார்பில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், மூன்று நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது. அதில், இந்திய தொழில் கூட்டமைப்பின், இந்திய பசுமை கட்டிட கவுன்சில் (IGBC) சார்பில் பசுமை கட்டிடங்கள் தொடர்பான தேசிய கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது.
அதில் இக்கூட்டமைப்பில் நிர்வாகிகள், இந்தியாவில் முதன் முதலாக 'நிகர பூஜ்ஜிய கார்பன் மதிப்பீட்டு அமைப்பை' தொடங்கி வைத்தனர். மேலும், பசுமை தொழிற்சாலை கட்டிட மதிப்பீடு 2.0, பசுமை கட்டிடம் 1.0, பசுமை வளாகம் 1.0 ஆகிய திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சிக்கு விருது:இவ்விழாவில், இன்று (நவ.24) கார்பன் உமிழ்வில் சிறந்த முறையில் செயல்பட்டதற்காக, உயர்ந்த பசுமை தர விருதினை சென்னை மாநகராட்சி கட்டடத்திற்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் பெற உள்ளார். மேலும், இந்தியாவில் முதல் முறையாக ஒரு அரசாங்க கட்டடத்திற்கு வழங்கப்படும் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று நாள் கருத்தரங்கு:இந்த கருத்தரங்கில் இடம் பெற்ற கண்காட்சியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், காற்று மாறுபடுதலை கட்டுப்படுத்துதல் தொடர்பான பொருட்களைக் கொண்ட 180 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கருத்தரங்கில், மொத்தம் 180 தொழில்நுட்ப வல்லுநர்கள், நாள் ஒன்றுக்கு 60 நபர்களாக சிறப்புரையாற்றுகின்றனர்.