தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜொலிக்கும் சென்னை ரிப்பன் மாளிகை! காரணம் இதுதானா? - shines on International world disability day

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, சென்னை ரிப்பன் மாளிகை மற்றும் நேப்பியர் பாலம் மின்னொளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 2, 2022, 9:01 AM IST

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பாரம்பரியமிக்க சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கட்டடத்தில் இரவு நேரங்களில் நிரந்தரமாக ஒளிரும் வண்ண விளக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ரிப்பன் கட்டடம் பகலில் வெள்ளை மாளிகையாகவும், இரவில் வண்ண மாளிகையாகவும் பொதுமக்களை கவரும் வகையில் ஜொலித்து வருகிறது.

ஜொலிக்கும் சென்னை ரிப்பன் மாளிகை!

அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட முக்கிய தினங்களில் அந்த தினத்தை கொண்டாடும் வகையில் ஒரே வண்ணத்தில் ரிப்பன் மாளிகையை ஒளிர செய்கின்றனர். கடந்த காலத்தில் சுகாதார தினம், மருத்துவர் தினம், பெண்கள் தினம் என பல்வேறு தினங்களுக்கு குறிப்பிட்ட ஒரே வண்ணத்தில் ஒளிர செய்துள்ளனர்.

ஜொலிக்கும் சென்னை நேப்பியர் பாலம்!

இந்நிலையில் நாளை டிசம்பர் 3 ஆம் தேதி, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகை மற்றும் நேப்பியர் பாலம் ஊதா நிறத்தில் மின்னொளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை கண்டுகளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கருணாநிதி நினைவிட கட்டுமான பணியில் தொய்வு? - அமைச்சர் விளக்கம்...

ABOUT THE AUTHOR

...view details