தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் அதிகாலை முதல் கனமழை!

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மழையின் புள்ளி விவரங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னை அம்பத்தூர் பகுதியில் 35.மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Chennai rains update area-wise

By

Published : Oct 22, 2019, 10:57 AM IST

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மழையின் புள்ளி விவரங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக சென்னை அம்பத்தூர் பகுதியில் 35 மி.மீ., மழையும்; குறைந்த பட்சமாக பெரம்பூர் 12.60 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மழையின் புள்ளி விவரங்கள் குறித்து அறிக்கை

மேலும், அயனாவரம் பகுதியில் 20 மி.மீ மழையும், எழும்பூரில் 23.40 மி.மீ மழையும், கிண்டியில் 29.20 மி.மீ மழையும், மாம்பழம் பகுதியில் 14.60 மி.மீ மழையும், மயிலாப்பூர் பகுதியில் 30.80 மி.மீ மழையும், புரசைவாக்கம் பகுதியில் 28.40 மி.மீ மழையும், தண்டையார்பேட்டை பகுதியில் 19.80 மி.மீ. மழையும், ஆலந்தூர் பகுதியில் 15.80 மி.மீ. மழையும், சோளிங்கநல்லூர் பகுதியில் 30 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க:

தொடர் மழை எதிரொலி - மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details