இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 20-01-2021, 21.01.2021 ஆகிய இரண்டு தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.