தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்தில்லா காவல் மாவட்டமாக மாற்றுவோம் - போக்குவரத்து துணை ஆணையர் உறுதி - லாரி ஓட்டுநர்கள்

சென்னை: விபத்தில்லா காவல் மாவட்டமாக மாற்ற போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் பூந்தமல்லியில் போக்குவரத்து காவல் மற்றும் தண்ணீர் லாரி ஓட்டுநர்கள் இடையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

police

By

Published : Jul 20, 2019, 11:57 PM IST

இந்திய அளவில் சாலை விபத்துகளில் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பெரும்பாலும் கனரக வாகனங்கள் விபத்துகளை ஏற்படுத்தும் சூழல் உள்ளது. சாலை விபத்துகளை குறைக்க அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பூந்தமல்லியில் அம்பத்தூர் போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் தண்ணீர் லாரி ஓட்டுநர்களுடன் சாலை விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சாலை விதிகள், மது அருந்திவிட்டு வாகனம் இயக்கக்கூடாது, உதவியாளர்களுக்கு வாகனங்களை ஓட்ட அனுமதி அளிக்கக்கூடாது போன்ற பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பேசிய அம்பத்தூர் போக்குவரத்து துணை ஆணையர், "பூந்தமல்லி, மதுரவாயல், போரூர், எஸ்.ஆர்.எம்.சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய காவல் எல்லையில் 2018ம் ஆண்டில் 348 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. அரசு பேருந்து, தண்ணீர் லாரிகள், தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் மூலம் மட்டும் 154 பேர் உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

பூவிருந்தவல்லி

மேலும் பேசிய அவர், "படுகாயம் அடைந்தவர்கள் வாகனங்கள் சேதமடைந்தவர்கள் என 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையை மாற்ற கனரக வாகனங்கள் இயக்குபவர்கள் பொறுப்புடன் செயல்பட்டு விபத்தில்லா காவல் மாவட்டமாக மாற்ற உதவி செய்ய வேண்டும்" என்றும், வேண்டுகோள் விடுத்தார்.

ABOUT THE AUTHOR

...view details