தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 நிமிடங்களில் உணவு டெலிவரி - சோமாட்டோ நிறுவனத்தின் அறிவிப்பால் சர்ச்சை - சென்னை போக்குவரத்து காவல்துறை

10 நிமிடங்களில் உணவு டெலிவரி அறிவிப்பு, டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சோமாட்டோ நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்தப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை முடிவு செய்துள்ளது.

10 நிமிடங்களில் உணவு டெலிவரி - சோமாட்டோ நிறுவனத்தின் அறிவிப்பால் சர்ச்சை
10 நிமிடங்களில் உணவு டெலிவரி - சோமாட்டோ நிறுவனத்தின் அறிவிப்பால் சர்ச்சை

By

Published : Mar 24, 2022, 10:37 AM IST

உணவு டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சோமாட்டோ நிறுவனம், சோமாட்டோ இன்ஸ்டன்ட் என்ற பெயரில் பத்து நிமிடங்களுக்குள் உணவு டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக நிறுவனர் தீப்பிந்தர் கோயல் நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர், எதிர்ப்பு தெரிவித்தும் அதேசமயம் நெட்டிசன்கள் இந்த அறிவிப்பை கிண்டல் செய்தும், பல்வேறு பதிவுகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆபத்து : குறிப்பாக பத்து நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்படும் என்ற உத்தரவாதம் நடைமுறை சாத்தியமற்றது எனவும் டெலிவரி செய்யும் நபருக்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும் எனவும் இதன்மூலம் சாலையில் வாகனத்தை வேகமாக இயக்கி விபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், சோமேட்டோ டெலிவரி நபருக்கு மட்டுமல்லாது சாலையில் செல்பவர்களுக்கும் இதனால் ஆபத்து இருப்பதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

10 நிமிடங்களில் உணவு டெலிவரி - சோமாட்டோ நிறுவனத்தின் அறிவிப்பால் சர்ச்சை
விளக்கம் : அதற்கு பதில் அளிக்கும் வகையில் பல்வேறு விளக்கங்களையும் சோமேட்டோ நிறுவனர் தீப்பிந்தர் கோயல் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார், ஒன்று முதல் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள உணவகங்களுக்கு மட்டுமே இந்த பத்து நிமிட டெலிவரி பொருந்தும் எனவும், அனைத்து ஓட்டல்களிலும் உள்ள அனைத்து உணவுகளும் இந்த பத்து நிமிட டெலிவரி பொருந்தாது எனவும், குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களை மட்டும் குறுகிய தொலைவுள்ள ஓட்டல்களில் இருந்து அருகாமையில் உள்ள வாடிக்கையாளருக்கு மட்டுமே இந்த பத்து நிமிட டெலிவரி செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
10 நிமிடங்களில் உணவு டெலிவரி - சோமாட்டோ நிறுவனத்தின் அறிவிப்பால் சர்ச்சை

பத்து நிமிட டெலிவரி : குறிப்பாக தற்போது தங்களது நிறுவனம் 20 முதல் 30 நிமிடங்களுக்குள் செய்யும் டெலிவரி எவ்வாறு சுமூகமாக எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதோ அதே வகையில்தான் இந்த பத்து நிமிட டெலிவரியும் திட்டமிட்டிருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.மேலும் ஒன்று முதல் இரண்டு நிமிடங்களுக்குள் தயாராகும் உணவை ஒன்று முதல் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கக் கூடிய வாடிக்கையாளருக்கு மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று டெலிவரி செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

10 நிமிடங்களில் உணவு டெலிவரி - சோமாட்டோ நிறுவனத்தின் அறிவிப்பால் சர்ச்சை

எனினும் இந்த விளக்கங்களில் திருப்தி அடையாத பல சமூக ஆர்வலர்கள் இந்த அறிவிப்பு பல்வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என கூறிவருகின்றனர். இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல் துறையிடம் கேட்டபொழுது, இந்த அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வரவில்லை எனினும், எதிர்காலத்தில் இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதை அந்நிறுவனத்திற்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-zomatoissue-script-7202290_24032022085737_2403f_1648092457_11.jpg

ஆலோசனை கூட்டம் : மேலும் சென்னையிலுள்ள சோமாட்டோ நிர்வாக அதிகாரிகளிடம் இந்த அறிவிப்பு தொடர்பாகவும் இதை எவ்வாறு அவர்கள் செயல்படுத்த உள்ளனர் என்பதையும் கேட்டறிவதற்கு விரைவில் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அக்கூட்டத்தில் குறிப்பாக டெலிவரி செய்யும் நபர் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வாகனத்தை இயக்கும் நிலைமை ஏற்படும் எனவும் சிக்னலில் நிற்காமல் செல்வது, ஒருவழிப்பாதையில் செல்வது வேகமாக சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் ஊடாக அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்குவது போன்ற ஆபத்துக்கள் இருப்பதை நிர்வாக அதிகாரியிடம் எடுத்து கூற உள்ளோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-zomatoissue-script-7202290_24032022085737_2403f_1648092457_11.jpg

ஒருவேளை இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்து, அதனால் ஏதும் விபத்து ஏற்பட்டால் அந்தக் குற்றத்திற்கு சட்டப்படி அந்த நிறுவனமும் உடந்தை என்பதையும் விளக்கிக் கூறுவோம் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க :பைக் சாகசம்: 4 நாள்களில் 18 பேர் கைது...! 21 வாகனம் பறிமுதல்...

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details