சென்னை:போக்குவரத்து விதிமுறைகளை மீறி, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக நடிகர் தனுஷின் மகனுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது புதிய வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியேறினார். இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் வசிக்கும் தனுஷின் மகன்கள் இருவரும் தனுஷ் வீட்டிலும் ரஜினி வீட்டிலும் மாறி மாறி இருந்து வருகின்றனர். இந்தச் சூழலில், கடந்த 4 ஆம் தேதி தனுஷின் வீட்டுக்கு வெளியே அவரது மூத்த மகன், அதிகவேக சூப்பர் பைக் ஒன்றை ஓட்டக் கற்றுக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.