சென்னைப் பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்பட்ட அசாம் இளைஞரை, அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் ஆணையர் சங்கர் ஜிவால், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”யூ டியூபர் மதனின் மனைவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது இல்லத்தில் இருந்து கணினி, இணையதளப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மதனை தீவிரமாகத் தேடி வருகிறோம். விரைவில் கைது செய்வோம். இணைய தளத்தில் நடைபெறும் இதுபோன்ற குற்றங்களில், ஓடிடி மற்றும் சமூக வலைதளங்களுக்கு தனித்தனி விதிகளை அரசு பிறப்பித்துள்ள்ளது. சமூக வலைதளக் குற்றங்களுக்கு உள்ளீடு, கண்காணிப்பு, நடவடிக்கை என மூன்று நிலைகளில் விசாரணை நடைபெறும்” எனத் தெரிவித்தார்.