தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணியிடமாற்றம் செய்யப்பட்ட காவலர்களுக்கு சுற்றறிக்கை - பணியிடமாற்றம் செய்யப்பட்ட காவலர்கள்

பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள 176 காவலர்கள் உடனடியாகப் பணியில் சேர சென்னை காவல் ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

காவலர்கள்
காவலர்கள்

By

Published : Nov 30, 2021, 8:36 AM IST

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி உள்ளிட்ட அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "தமிழ்நாடு காவல் துறையில் பல மாவட்டங்களில் பல பிரிவுகளில் பணிபுரிந்துவரும் காவலர்கள் சென்னைக்கு பணியிடமாற்றம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதில் பணியிடமாற்றம் செய்யப்பட்டும் 176 காவலர்கள் இன்னும் பணியில் சேராமல் உள்ளனர்.

மேலும் பட்டியலில் குறிப்பிட்டுள்ள காவலர்களை அந்தந்த மாநகர, மாவட்ட உயர் அலுவலர்கள் பணியிலிருந்து விடுவிக்காமிலிருந்தால் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

அவர்களை விடுவித்த குறிப்பிட்ட தேதியைச் சென்னை காவல் துறை தலைமையகத்திற்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட காவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகள் இருந்தாலோ, குற்றச்சாட்டுகள் இருந்தாலோ அல்லது பணியிடமாற்ற ஆணை பின்வாங்கப்பட்டிருந்தாலோ அந்தத் தகவலையும் உடனடியாக சென்னை காவல் துறைத் தலைமையகத்திற்கு அறிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தொழில் அதிபர் கடத்தல் விவகாரம்: 6 காவலர்களை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details