சென்னை: கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் பின்புறத்தில் உள்ள தங்கும் விடுதியில் சந்தேகத்திற்குரிய சில நபர்கள் அறையில் தங்கி இருப்பதாக சி.எம்.பி.டி(CMBT) போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் போலீசார் அறையில் தங்கி இருந்த நான்கு நபர்களை பிடித்து விடுதி அறையில் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர்களிடமிருந்து போலியான ஒரு கை துப்பாக்கி மற்றும் எட்டு தோட்டாக்கள், கை விலங்கு, லீடிங் செயின் மற்றும் கோபுர கலசத்திற்கு ரைஸ் புல்லிங் கலச செம்பு, கருப்பு அரிசி 50 கிராம், மற்றும் போலி அடையாள அட்டைகள், நிர்வாணமாக தெரியக்கூடிய போலி கண்ணாடிகள் ஆகியவற்றை அந்த நான்கு நபர்கள் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.