சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இந்நிலையில், சில இடங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை காவல்துறை மாவட்டங்களில் தனித்தனியாக உள்ள பேரிடர் மீட்புப் படை குழுவினர் களம் இறங்கி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னையில் கூடுதல் காவல் பேரிடர் மீட்பு படைக் குழுவினரைக் களம் இறக்கி உள்ளதாகவும், அதற்கான உதவி மையம் எண்களை காவல்துறை அறிவித்துள்ளது.