சென்னை: கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமெடுத்துவரும் நிலையில் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் போரூர், காரம்பாக்கம் சோதனைச்சாவடி ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து தடையை மீறிச் செல்லும் வாகனங்களைத் தீவிரமாகக் கண்காணித்து பரிசோதனை செய்தனர்.
மேலும், அத்தியாவசியத் தேவைகளின்றி செல்லும் வாகனங்கள் தீவிரமாகக் கண்காணிக்க்பபட்டு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. விதிமுறைகளை மீறி வந்தவர்களைக் காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய காவல் துறை இதேபோல், சென்னையின் நுழைவுவாயிலான பெருங்களத்தூரில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இரவு 10 மணிக்கு மேல் மீறிவந்ததை அடுத்து புனித தோமையார் மலை துணை ஆணையர் பிரபாகரன் தலைமையில் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து 10 மணிக்கு மேல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள், அரசுப் பேருந்து ஓட்டுநர்களை எச்சரித்து அனுப்பினர்.
நேற்று முதல் நாள் என்பதால் வெறுமென எச்சரித்து அனுப்பியதாகவும், இன்றுமுதல் ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துணை ஆணையர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இரவுநேர ஊரடங்கை மீறியவர்களை எச்சரித்து அனுப்பிய காவல் துறை இதையும் படிங்க:வழிபாட்டுத் தலங்களை குறைந்தது இரண்டு மணி நேரம் திறக்க மத தலைவர்கள் கோரிக்கை