நிவர் புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று மதியம் (நவம்பர் 25) ஏரி திறக்கப்பட்டது. இதனையடுத்து சென்னையின் பல பகுதிகள் நீரால் சூழப்பட்டது.
தண்ணீரால் சூழப்பட்ட ரிப்பன் மாளிகை - ரிப்பன் மாளிகை
சென்னை: நிவர் புயல் தாக்கத்தால் பெய்த மழையால் சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகை தண்ணீரால் சூழப்பட்டு குளம் போல் காட்சி அளிக்கிறது.
rib
இந்த நிலையில் சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகை தண்ணீரால் சூழப்பட்டு குளம் போல் காட்சி அளிக்கிறது. அதனை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகராட்சியின் பள்ளமான பகுதிகளில் இருந்து பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் செல்லும் மழைநீர் வடிகால் அமைப்புகளுக்கு ஜெனரேட்டர் கொண்டு தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.