தமிழ்நாடு

tamil nadu

சென்னை மெட்ரோ சேவை நேரம் இன்றுமுதல் நீட்டிப்பு

By

Published : Aug 23, 2021, 6:51 AM IST

Updated : Aug 23, 2021, 7:29 AM IST

பயணிகளின் கோரிக்கையை ஏற்று இன்றுமுதல் (ஆக. 23) காலை 5.30 மணிமுதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ
சென்னை மெட்ரோ

தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்துவரும் நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்கும் நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்றுமுதல் வார நாள்களில் காலை 5.30 மணிமுதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் நேரங்களான காலை 8 மணிமுதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரை 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயங்குகின்றன.

மேலும் அரசு விடுமுறை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணிமுதல் 10 மணிவரை 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

முகக்கவசம் கட்டாயம்

மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில்களில் நுழையும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியவில்லை என்றாலும், அல்லது சரியாக முகக்கவசத்தை அணியவில்லை என்றாலும் அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படும் என எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

Last Updated : Aug 23, 2021, 7:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details