தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மெட்ரோ ரயிலில் இறைச்சி எடுத்துச் செல்லக்கூடாதது ஏன்? மெட்ரோ அதிகாரி விளக்கம்

மெட்ரோ ரயிலில் சமைக்கப்படாத இறைச்சிகள் கொண்டு செல்லக்கூடாது, என ஏற்கனவே விதிமுறைகள் உள்ளதாக மெட்ரோ நிர்வாகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்ருதி விளக்கமளித்துள்ளார்.

By

Published : Jan 9, 2023, 11:04 PM IST

மெட்ரோ அதிகாரி விளக்கம்
மெட்ரோ அதிகாரி விளக்கம்

சென்னை: மெட்ரோ ரயிலில் சமைக்கப்படாத மீன் மற்றும் இறைச்சி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மெட்ரோ நிர்வாகம் ரயில் நிலையங்களில் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. இதனால் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு, "மெட்ரோ ரயிலில் சமைக்கப்படாத மீன் மற்றும் இறைச்சிகளை கொண்டு செல்லும் போது துர்நாற்றம் வருவதற்கு வாய்ப்புள்ளது. மெட்ரோ ரயில் குளிரூட்டப்பட்டு இருப்பதால் இறைச்சி மூலம் சக பயணிகள் பாதிக்கப்படுவார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டது.

பெங்களூருவிலும் இதே போன்று மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. அங்கும் ஆரம்பத்தில் இறைச்சி எடுத்துச் செல்லக்கூடாது என விதிமுறைகள் கொண்டு வந்திருந்தாலும் தற்போது சமைக்கப்படாத உணவுகளை எடுத்துச் செல்லலாம் என நிலை உள்ளது. ஆனால், அவற்றை ரயிலில் திறந்து பார்க்கவோ, சாப்பிடவோ அனுமதி கிடையாது. இறைச்சி உள்ளிட்ட பொருட்களை நன்கு இறுக்கமாக மூடிய நிலையிலேயே எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இதே போல் சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகமும் தங்களது கட்டுப்பாடுகளை சற்று தளர்த்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து நம்மிடையே பேசிய மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்ருதி, "ஏற்கனவே மெட்ரோ ரயில் உள்ள விதிமுறை 2014-ன்படி இறைச்சிகள் எடுத்து வரக்கூடாது என்று உள்ளது. தற்போது இதில் எந்த மாற்றமும் கொண்டுவரவில்லை. மேலும், இது குறித்தான தகவலுக்கு சென்னை மெட்ரோ ரயிலின் இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்" என கூறினார்.

இதையும் படிங்க:Chennai Metro Rail: 2022-ல் மெட்ரோ பயனர்கள் எவ்வளவு தெரியுமா.?

ABOUT THE AUTHOR

...view details