சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் - 2 வழித்தடம் 3 மற்றும் 5-ல் துணை நிலையம், துணை கட்டிடம் மற்றும் மேற்பார்வை கட்டுப்பாடு மையத்தில் மின்சார பணிக்களுக்கான ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு ரூ.533.87 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3 (மாதாவரம் - பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை) மற்றும் வழித்தடம் 5ல் (மாதவரம் பால்பண்னை முதல் சிஎம்பிடி மற்றும் மாதவரத்தில் உள்ள பணிமனை உட்பட) துணை நிலையம், துணை கட்டிடம் மற்றும் மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்தல் அமைப்பிற்கான அனைத்து வகையான மின்சார பணிகளுக்கான ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு ரூ.533.87 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மின்சார அமைப்பின் ஒட்டுமொத்த வடிவமைப்பு, தடையற்ற சேவைகளை வழங்குவதற்காக பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நிலையான மின்சாரம், அத்துடன் திறமையான மின் அமைப்பின் செயல் திறன் ஆகியவற்றை வழங்குவதை மையமாகக் கொண்டுள்ளது.
வழித்தடம் 3இல் 29 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 10 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்கள், வழித்தடம் 5இல் 6 சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் மாதவரம் பணிமனை இதில் அடங்கும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு ரூ. 533.87 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் ஒப்பந்த துணை மின்நிலைய வணிகப் பிரிவின் தலைவர் ஹெச்.ராஜேந்திரன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.