தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்த 3 மணி நேரத்தில் மழை! - Chennai Meteorological Department

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chennai Meteorological Department has forecast showers in several districts in Tamil Nadu
Chennai Meteorological Department has forecast showers in several districts in Tamil Nadu

By

Published : Apr 19, 2021, 5:18 PM IST

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இன்று பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details