மன்னார் வளைகுடா கடல்பகுதியில் நிலைகொண்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று (டிசம்பர் 7) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (டிசம்பர் 8) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்; மேலும் சென்னை, புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.