தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை கடன் திருவிழா, மத்திய அமைச்சர் பங்கேற்பு - Chennai loan Mela

சென்னை: தியாகராய நகரில் நடைபெற்ற, சிறப்பு லோன் மேளாவில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கலந்து கொண்டார்.

Chennai loan mela

By

Published : Oct 5, 2019, 8:22 PM IST

சென்னையில் கடன் திருவிழா

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் வகையிலும் பண்டிகை காலத்தை முன்னிட்டும், சிறப்பு லோன் மேளாவை நடத்த மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்தது. நாடு முழுவதும் 250 மாவட்டங்களில் லோன் மேளாவை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு எளிமையான முறையில் பல்வேறு தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ஒரே இடத்தில் இணைந்து தங்களது கடன் சேவைகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கடன் முகாம்கள் நடத்தும் மத்திய அரசின் திட்டத்தின்படி, முதற்கட்டமாக 400 மாவட்டங்களில் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி சென்னையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, ஐடிபிஐ வங்கி, எச்.டி.எஃப்.சி., ஆக்சிஸ், ஐசிஐசிஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகளும், வீட்டுக் கடன் நிறுவனங்கள், சிறு குறு கடன் நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிதி அமைப்புகளும் ஒன்றிணைந்தன.

முக்தர் அப்பாஸ் நக்வி பங்கேற்பு

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று பயனாளிகளுக்கு கடன்களுக்கான காசோலைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு யாரிடமும் பாரபட்சம் பார்ப்பதில்லை.

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி செய்தியாளர் சந்திப்பு

புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள் எளிமையான வகையில் கடன் பெற வசதியாக ஒற்றைச் சாளர முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரமே மந்த நிலையில் இருக்கும் நேரத்தில், இந்திய பொருளாதாரம் மட்டும் பாதுகாப்பானாக உள்ளது" என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஹஜ் யாத்திரை செல்வதற்கான முன்பதிவு தொடங்குகிறது.

இந்த முறை முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையிலேயே பதிவு செய்யப்படுகிறது. இதற்கான இறுதி தேதி நவம்பர் 10ஆம் தேதி வரை உள்ளது. ஹஜ் யாத்திரை செல்ல நினைக்கும் காஷ்மீர் பயணிகளுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை.

உலகப் பொருளாதாரமே மந்த நிலையில் இருக்கும் சூழலில் நமது நாட்டின் பொருளாதாரம் மட்டும் சீராக உள்ளது. அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டிற்காக மோடி தலைமையிலான அரசு முயற்சித்து வருகிறது. நாட்டின் அமைதியை சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details