தமிழ்நாடு

tamil nadu

மெக்னீசிய உலோகத்தை பயன்படுத்தி முயலுக்கு எலும்பு முறிவு சிகிக்சை... வெற்றி கண்ட சென்னை ஐஐடி!

By

Published : Sep 22, 2020, 2:19 AM IST

Updated : Sep 22, 2020, 2:14 PM IST

சென்னை: நானோ கலவை பூசப்பட்ட மெக்னீசியத்தை பயன்படுத்தி முயலுக்கு ஏற்பட்ட எலும்பு முறிவை சரிசெய்து சென்னை ஐஐடி சாதனை படைத்துள்ளது

rab
rab

எலும்பு முறிவுகளை சரிசெய்வதற்கு மெக்னீசியம் உலோகக் கலவைகளை பயன்படுத்த சில சிக்கல்களால் தடை செய்யப்பட்டுள்ளது.

rab

இந்நிலையில், சென்னை ஐஐடியின் பயோடெக்னாலாஜி துறை பேராசிரியர் முகேஷ் டோபிள் தலைமையிலான குழுவினர் நானோ கலவை பூசப்பட்ட மெக்னீசியம் உலோகத்தைப் பயன்படுத்தி எலும்பு முறிவு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளனர். இந்த சிகிச்சை முறையை முதன் முதலாக முயலுக்கு பரிசோதனை செய்து வெற்றி கண்டுள்ளனர்.

முயலுக்கு மெக்னீசியம் மூலம் சிகிச்சையளிக்கும் முறை

மனிதர்களுக்கு முன்னங்கை, முதுகு, கால் மற்றும் தொடை போன்ற உடல் பகுதிகளில் நீண்ட எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் முறிவு அல்லது குறைபாடுகள் ஏற்பட்டால் இந்த முறையை பயன்படுத்தி ஒரு அடி அல்லது 5 சென்டிமீட்டர் வரை சிசிக்கை அளித்து சரிசெய்ய முடியும்.

அடுத்ததாக இந்த சிகிச்சையின் முக்கியத்துவத்தைக் காட்டுவதற்காக ஆடு அல்லது செம்மறி ஆடு போன்ற பெரிய விலங்குகளின் எலும்பு குறைபாடுகளை சரிசெய்ய உபயோகிக்கவுள்ளனர். இந்த சிகிச்சையின் முடிவும் வெற்றி பெற்று விட்டால், அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

மெக்னீசிய உலோகத்தை பயன்படுத்தி முயலுக்கு எலும்பு முறிவு சிகிக்சை பற்றி விவரிக்கும் பேராசிரியர் முகேஷ்
Last Updated : Sep 22, 2020, 2:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details