கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இச்சூழ்நிலையை பயன்படுத்தி சிலர் சட்ட விரோதமாக மதுபானத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றுவருவதாக தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில், சட்டவிரோத மது விற்பனை செய்யும் நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார். உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் தீவிரமாக சோதனை நடத்தினர்.
இதில், நேற்று ஒரே நாளில் மட்டும் வடக்கு மண்டலத்தில் சட்ட விரோதமாக 111 பேர் மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது.