சென்னை: ஐஐடியில் தொடர்ந்து சாதிய வன்கொடுமைகள் நடைபெற்று வருவதாகக் கூறி உதவி பேராசிரியர் விபின் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாகவே ஐஐடியில் சாதிய பாகுபாடுகள் உள்ளதாகக் கூறி பல்வேறு புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் ஐஐடி உயர்கல்வி நிறுவனமா அல்லது உயர் சாதி நிறுவனமா எனக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் இன்று (ஜீலை.05) மத்திய கைலாஷ் அருகே கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ் கூறியதாவது, "சென்னை ஐஐடியில் முன்னேறிய பிரிவினருக்கு மட்டும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு இதர பிரிவினருக்கு வாய்ப்புகள் முற்றிலும் மறுக்கப்படுகிறது. உதவி பேராசிரியர் விபின், பேராசிரியர் வசந்தா கந்தசாமி, பாத்திமா லத்தீப் உள்ளிட்ட பலர் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.